குழந்தைப் பருவத்தில் மிட்டாய் கொடுப்பது நல்லதா?குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட காலகட்ட வயது வரை இனிப்பு கொடுக்க வேண்டும். இனிப்புt கொடுப்பதால் இனிப்புக்கு உண்டான ஏக்கம் நாளடைவில் குறைந்து விடும். இந்த காலகட்டத்தில் இனிப்பு கொடுக்காமல் தவிர்ப்பதால் குழந்தை வளர்ந்து பெரிய குழந்தைகளாக ஆகும் வரைக்கும், இனிப்புக்கு உண்டான தேடல் இருக்கும்
.* தவிர்க்க வேண்டிய உணவு வகைகளால் எவ்வித பாதிப்புகள் ஏற்படும்?
வீட்டில் செய்த ஆரோக்கியமான சிற்றுண்டி என்பது சில நாட்களில் காலாவதி ஆகி விடும். மேலே கூறியுள்ள உணவு வகைகள் ஆண்டுக்கணக்கில் கெடாது. ஏனென்றால் இதில் சேர்க்கப்படும் பதப்படுத்தப்பட்டt பொருட்கள் (ரசாயனம்) செயற்கையான வண்ணங்களை ஏற்படுத்தும். இவ்வகை ரசாயனம், உணவு கெடாமல் அதே நேரம் நம் உடலுக்கு பல்வேறு தீங்கை ஏற்படுத்தும் தன்மையுடையது. மேலும் சிற்றுண்டியின் மொறுமொறு தன்மை மாறாமல் இருக்க உணவு பாக்கெட்டை 'நைட்ரஜன்' எனும் காற்றால் அடைக்கின்றனர். இது உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தக்கூடியது.முந்திரி, பாதாம் போன்ற பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே சாக்லெட் தயாரித்தல், முட்டை, பால், சர்க்கரை மற்றும் மாவு ஆகியவற்றை வைத்து வீட்டிலேயே சுவையான கேக் தயாரித்து கொடுக்கலாம்.* எவ்வகையான இனிப்புகள் கொடுப்பது அவசியம்?
கருப்பட்டி, வெல்லப்பாகு, அச்சு வெல்லம், பனை வெல்லம் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் கொடுக்கலாம். உதாரணமாக கடலை மிட்டாய், எள் மிட்டாய், கொக்கோ மிட்டாய், கமர்கட், பால்கொழுக்கட்டை, பால்கோவா, வெல்லத்துடன் சேர்த்து கேழ்வரகு கலந்த உணவு, வெல்லம் மற்றும் சோளம் கலந்த உணவு, சிறுதானிய வகைகளுடன் இனிப்பு சேர்த்து கொடுப்பது ஆரோக்கியமான சிற்றுண்டி.
இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. ஏனென்றால் அந்த வெல்லப்பாகை பெரிய இனிப்பு சட்டியில் காய்ச்சுவதால் இரும்பு சத்து மிக்க உணவு பொருளாக மாறி விடுகிறது.* தவிர்க்க வேண்டிய இனிப்பு பண்டங்கள் என்னென்ன? வெள்ளை சர்க்கரை, மைதா, சாக்லெட், ஜெல்லி மிட்டாய், லாலிபாப், கிரீம் பிஸ்கட், ஜாம், ஜாஸ், பபுல் கம், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானம் மற்றும் உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.-
thanks to
டாக்டர். பிரசன்ன கார்த்திக், குழந்தைகள் நல நிபுணர், மதுரை,அலைபேசி: 96299 02323.

No comments:
Post a Comment
Please Comment