கற்கண்டு இனிப்பு வகையில் சேர்ந்தது என்பது பொதுவாக எல்லோரும் அறிந்திருக்கும் தகவல். ஆனால், உடலுக்கு தேவையான குணநலன்களை கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜீரணத்திற்கும், ஹீமோக்ளோபின் அளவு அதிகரிக்கவும், கற்கண்டு பயன்படுகிறது. ஆயூர்வேத மருத்துவத்தில் கற்கண்டு பயன்படுகிறது. குறிப்பாக, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே இருக்கும் மருந்தாக கற்கண்டு உள்ளது.
பல வகை இருமல் பிரச்சனைகள் மனிதனை தாக்குகின்றன. குறிப்பாக, அதிக சளி ஏற்படுத்தும் இருமலை குணப்படுத்த கற்கண்டு உதவுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருமல் ஏற்பட காரணமான சளியை நீக்க கற்கண்டு செயல்படுகிறது என்று மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இருமல் பாதிப்பு ஏற்படும் போது, கற்கண்டை சாப்பிட்டு வந்தால், தொண்டை கரகரப்பு நீங்கும். கற்கண்டுடன், மிளகு சேர்த்து அரைத்து வைத்து கொள்ளும். இருமல் பிரச்சனை இருக்கும் போது, இரவு தூங்கும் முன்பு இந்த பொடியை சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமாகும். தேநீரில், கற்கண்டு, மிளகு சேர்த்து கலக்கி குடித்தால், இருமல் பிரச்சனை நீங்கும்.

No comments:
Post a Comment
Please Comment