கூகுள் டிரைவில் இருந்து வாட்ஸ்அப் டேட்டாவை அழிப்பது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கூகுள் டிரைவில் இருந்து வாட்ஸ்அப் டேட்டாவை அழிப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் லொகேஷனை ஆஃப் செய்திருந்தாலும், பயனர்கள் செல்லும் இடங்களை டிராக் செய்வதாக கூகுள் சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பு பயனர்களின் டேட்டா பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை உலகம் முழுக்க சுமார் 200 கோடி பேரும், ஐபோன்களில் கூகுள் மேப்ஸ் மற்றும் சர்ச் அம்சம் பயன்படுத்தும் சில லட்சம் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



இவை அனைத்திறஅகும் மத்தியில் கூகுள் உங்களது வாட்ஸ்அப் டேட்டாவையும் சேமித்துக் கொள்கிறது. அந்த வகையில் உங்களது சாட்கள் -- மல்டிமீடியா ஃபைல்கள் உள்ளிட்டவை சேமிக்கப்படுகின்றன. 


எனினும் இவை கூகுள் டிரைவில் இடத்தை அடைத்துக் கொள்ளாது. அந்த வகையில் உங்களின் குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் க்கள் நீங்கள் சின்க் செய்திருக்கும் கூகுள் டிரைவ் அக்கவுண்ட்டில் கூகுள் உங்களுக்கு வழங்கிய 15 ஜிபி டேட்டாவில் சேமிக்காது.


கிளவுட் போன்ற தளங்களில் டேட்டா இருக்கும் போதும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய மடியாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி கூகுள் டிரைவில் இருக்கும் உங்களது வாட்ஸ்அப் டேட்டாவை அழிக்கலாம்:


1. கூகுள் டிரைவ் வலைத்தளத்திற்கு (https://drive.google.com) உங்களது டெஸ்க்டாப் மூலம் சென்று கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக் இன் செய்யவும்


2. ஸ்மார்ட்போனில் இந்த இணைய முகவரியை பயன்படுத்தினால், இடதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் டெஸ்க்டாப் வெர்ஷன் "Desktop Version" எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்


3. இனி வலதுபுறம் மேல்பக்கம் இருக்கும் கியர் ஐகானை க்ளிக் செய்யவும்


4. செட்டிங்ஸ் சென்று மேனேஜ் ஆப்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
5. கீழே ஸ்கிரால் செய்து வாட்ஸ்அப் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
6. வாட்ஸ்அப் மெசன்ஜர் ஆப்ஷனின் கீழ் "Hidden app data" ஆப்ஷன் தெரியும் வரை காத்திருக்கவும்


7. ஆப்ஷன்களை க்ளிக் செய்து Delete hidden app data ஆப்ஷனை க்ளிக் செய்யவும்


8. டிரைவ் உங்களை ஒருமுறை மட்டும் எச்சரிக்கும், இதில் உங்களின் ____ஜிபி வாட்ஸ்அப் மெசன்ஜர் டேட்டா டிரைவில் இருந்து அழிக்கப்பட்டு விடும். மீண்டும் டெலீட் ஆப்ஷனை க்ளிக் செய்து உறுதிப்படுத்தவும் என்ற தகவல் தெரியும். இப்போது இறுதியாக ஒருமுறை Delete ஆப்ஷனை க்ளிக் செய்து உறுதிப்படுத்தவும்.

No comments:

Post a Comment

Please Comment