பொதுமக்கள் அனைவருக்கும் எளிதாக, விரைவாக டிரைவிங் லைசென்ஸ் கிடைக்க டில்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அம்மாநில அரசு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பழகுநர் உரிமங்கள் கிடைக்க வழிவகை செய்துள்ளது.
டில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு இத்திட்டத்தை பல கல்லூரிகளில் தொடங்கி இளம் மாணவர்களுக்கு பழகுநர் உரிமத்தை வழங்கியுள்ளது. இத் தகவலை அம்மாநில போக்குவரத்து கமிஷனர் வர்ஷா ஜோசி உறுதி செய்துள்ளார். இத்திட்டம் தற்போது இரண்டு கல்லூரிகளில் வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு கல்லூரிகள் விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன. டில்லியில் உள்ள 10 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் பணி தொடங்க உள்ளது.
கல்லூரி மாணவர்கள் லைசென்ஸ் இல்லாமல் வண்டிகளை ஓட்டக்கூடாது என்ற விழிப்பு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், லைசென்ஸ் எடுப்பதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் அதிகளவில் லைசென்ஸ் எடுக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Please Comment