வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சேர்க்க ஐஐடி(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், அந்தக் கல்வி நிறுவனத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள தொழில்நுட்ப கல்விக் நிறுவனங் களில் ஐஐடி மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனினும், வெளி நாட்டு மாணவர்கள் அதிக அளவி லும், நிரந்தரப் பணிகளில் வெளிநாடு ஆசிரியர்களும் இல்லாததால் அது சர்வதேச தரவரிசைப் பட்டியலில் தகுந்த இடம் பெற முடியாத நிலை உள்ளது.
இதற்கு ஐஐடியில் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு மாணவர் களும், ஆசிரியர்களும் இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும். ஐஐடி யில் பிடெக் எனும் பட்டமேற்படிப் பில் சேர்வதற்கு இந்தியாவில் நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது முக்கியம். இதை குறைவானவர்கள் செய்வதால், அதிகமான வெளி நாட்டு மாணவர்கள் எம்டெக் எனும் பட்டமேற்படிப்பில் சேர்ந்து ஐஐடியில் பயின்று வருகிறார்கள். ஆனால், இதற்கு வெளிநாட்டு மாணவர்களுக்கானக் கட்டணத் தொகை அதிகம் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் மட் டுமே அவர்கள் சேரும் நிலை உள்ளது. அதேபோல், வெளிநாட்டு ஆசிரியர்கள், ஐஐடியின் நிரந்தரப் பணியில் சேர பல்வேறு நிபந்தனை களும் உள்ளன.
இந்நிலையில், சர்வதேச தர வரிசைப் பட்டியலில் ஐஐடி-யை இடம்பெறச் செய்வதற்கு தேவை யான நடவடிக்கைகளை மேற் கொள்ள தற்போது முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக வெளி நாட்டு மாணவர்களுக்கான கல்வித் தொகையை குறைக்கவும், ஆசிரி யர்களை நிர்ணயிக்கவும் ஒவ் வொரு ஐஐடி நிர்வாகத்துக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான ஐஐடி கவுன்சில் நேற்று கூடி எடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச் சக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, 'ஐஐடியின் நிரந்தரப் பணியில் சேர வெளிநாட்டவர் களுக்கு இருக்கும் குடியுரிமை சட் டத்தின் நிபந்தனைகளை மத்திய வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களிடம் பேசி தளர்த்து வதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஐஐடியின் நிதிநிலையை சமாளிக் கும் பொருட்டு வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. இனி அதை யும் தம் நிதிநிலைக்கு ஏற்ற வகையில் ஐஐடி நிர்வாகங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்' எனத் தெரிவித்தன.
கடந்த 2016-17 ஆம் கல்வி யாண்டு வரை சார்க் நாடுகளின் மாணவர்களுக்கு 2000 டாலர் (சுமார் ரூ.1.3 லட்சம்), மற்ற நாட்டின் மாணவர்களுக்கு 4000 டாலர்கள் எனவும் கட்டணத் தொகை இருந்தது. 2017-18 கல்வி யாண்டு முதல் மத்திய மனித வளமேம்பாட்டுத்துறையால் வெளி நாட்டு மாணவர்கள் அனைவருக் கும் வருடம் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்திய மாணவர்கள் பி.டெக் பயில வரு டம் ஒன்றுக்கு ரூ.2 லட்சமும், எம்.டெக். பயில சுமார் ரூ.50,000 எனவும் உள்ளது.
No comments:
Post a Comment
Please Comment