முன்னாள் படைவீரர் வாரிசுக்கு பிரதமரின் கல்வி உதவித்திட்டம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முன்னாள் படைவீரர் வாரிசுக்கு பிரதமரின் கல்வி உதவித்திட்டம்

முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தை சேர்ந்த, கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர், பிரதமரின் கல்வி உதவி பெற, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



அலுவலர் நிலைக்கு குறைவான தரத்தில், பணியாற்றிய, முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி உதவி கேட்டு விண்ணப்பிக்கலாம். கல்லுாரியில், முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.தகுதியானவர்கள், www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்து, அனைத்து வகை அசல் ஆவணங்களுடன், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு வரவேண்டும்.பிளஸ் 2 தேர்வில், 60 சதவீத மதிப்பெண் அல்லது அதிகமாக பெற்று, தேர்ச்சி பெற்று, தொழிற்படிப்பு பயிலும், முன்னாள் மாணவர்களின் வாரிசுகள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலும்.


மேலும் விவரங்களுக்கு, கலெக்டர் அலுலவலக வளாகத்தில் உள்ள, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தைதொடர்பு கொள்ளலாம். 0421 2971127 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது. - 

No comments:

Post a Comment

Please Comment