மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்


கேரளாவில் பத்திரிகையாளர் ஒருவர் தனது மகளுக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு அந்தப் பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.


கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு நிலவி வருகிறது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புழா, வாளையார் ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தவிடப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள பல்வேறு தரப்பினரும் தங்களது உதவி கரத்தை நீட்டி வருகிறார்கள். வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் உதவி செய்யுமாறு முதலமைச்சர் பினராயி விஜயனும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்நிலையில், கேரளாவில் பத்திரிகையாளர் மனோஜ் என்பவர் கன்னூரில் தனது மகளுக்கு நடக்கவிருந்த நிச்சயத்தை ரத்து செய்துவிட்டு அந்தப் பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “எனது மகளின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறுவது என்று திட்டமிடப்பட்டு இருந்தது. கேரள மாநில மிகப்பெரிய வெள்ளப் பேரிடரை சந்தித்து வருவதால் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிறோம். நிச்சயதார்த்தத்திற்கு ஆகும் செலவினை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளிப்பது என்று மாப்பிள்ளை வீட்டாருடன் சேர்ந்து முடிவு எடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment

Please Comment