சென்னையில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு: 10 முதுகலை ஆசிரியர் தேர்வு
ஒன்றிய மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி வழங்குவதற்காக, சென்னையில் நடக்கும் கருத்தாளர் பயிற்சியில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, 10 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்
. பள்ளிக்கல்வித்துறை சார்பில், நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஒரு இலவச, 'நீட்' தேர்வு பயிற்சி மையம்
அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 'நீட்' தேர்வில் பல்வேறு புதிய முறைகள், பாடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால், அது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சியளிக்க மாவட்டங்களுக்கு, தலா, 10 கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம், 320 கருத்தாளர்களுக்கு (முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்) சென்னையில் வரும், 20 முதல், 25 வரை ஐந்து நாட்கள் சிறப்பு பயிற்சி நடக்கிறது.
அதன்படி, நீட் தேர்வு பயிற்சி பெற, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் என, 10 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சிக்கு பின், இங்குள்ள ஒன்றிய மையங்களில் மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான பயிற்சிகளை வழங்க உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Please Comment