சிவகாசி அரசு பள்ளியில் எல்இடி திரை மூலம் படிக்கும் மாணவர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிவகாசி அரசு பள்ளியில் எல்இடி திரை மூலம் படிக்கும் மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு துவக்க பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் எல்இடி திரை மூலம் பாடம் நடத்தப்படுவதால் அனைத்து மாணவர்களும் உற்சாகத்தோடு பள்ளிக்கு வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் 122 ஆண்டு பழமை வாய்ந்த அரசு துவக்க பள்ளியில் புதிய யுக்திகளை கையாண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது. 

மாவட்டத்திலேயே அதிக மாணவர்களை கொண்ட பள்ளி என்ற சிறப்பை கொண்ட இந்த பள்ளியின் 15 வகுப்பறைகளில் எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. 
இங்கு பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ள QR கோட் முறையில் ஸ்கேன் செய்து பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு QR கோட் முறை கற்பித்தல் சுவாரசியம் தருவதாக கூறுகின்றனர் ஆசிரியர்கள்.

No comments:

Post a Comment

Please Comment