பள்ளி நேரத்தில் மாணவ மாணவிகள் டேபிளட், ஸ்மார்ட் போன் பயன்படுத்த பிரானஸ் அரசு தடை விதித்துள்ளது.
இந்த கல்வி ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 15 வயது வரையிலான அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இது பொருந்தும்.
இந்த புதிய உத்தரவு மூலம் டேபிளட், ஸ்மார்ட் போன் ஆகியவை பள்ளிகளுக்கு கொண்டு செல்ல மாணவ மாணவிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால், பள்ளிகளில் இவற்றை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருக்க வேண்டும். பாடம் நடத்துவதற்காக பள்ளிகள் இதை பயன்படுத்த தடை கிடையாது.
அங்கு 1 முதல் 19 வரையிலான 78 சதவீத சிறுவர்கள் ஸ்மார்ட் போன் அல்லது ஒரு தொடர்பியல் சாதனங்களை பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.இவற்றுக்கு சிறுவர் சிறுமியர் அடிமை ஆவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு முதலே மென்மையான தடை இதற்கு அமலில் உள்ளது. பள்ளியில் வகுப்பு நேரத்தில் மட்டுமே பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது சாப்பட்டு நேரம், வகுப்பறை, பள்ளி வளாகம் போன்ற இடங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் வாகனங்களை ஓட்டும் போதும், பின்னால் உட்கார்ந்து செல்லும் போதும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. வாகனத்தின் என்ஜின் நிறுத்தப்படும் வரை ஸ்மார்ட் போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருக்க வேண்டும் என்ற விதி பிரான்ஸில் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Please Comment