மெல்போர்ன்: கணிதத்திறிற்கான நோபல் பரிசு என அழைக்கப்படும் பீல்ட்ஸ் விருது, இந்திய வம்சாவளியை சேர்ந்த அக்ஷய் வெங்கடேசுக்கு வழங்கப்பட்டுள்ளது. கணித நோபல் பரிசு கனடாவை சேர்ந்த கணிதவியலாளர் ஜான் சார்லஸ் பீல்ட்ஸ், 1924 ம் ஆண்டு கணிதத்திற்கான அமைப்பை உருவாக்கினார். தொடர்ந்து, கணிதத்தில் சாதிப்பர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்ற யோசனையையும் வைத்தார். இதனை ஏற்று கொண்டு, கணிதத்தில் சாதனை படைத்து வரும் 40 வயது வரை உள்ளவர்களுக்கு பீல்ட்ஸ் விருது வழங்கப்படுகிறது.
குறைந்த பட்சம் 2 பேருக்கும், அதிகமாக 4 பேருக்கும் இந்த விருது கணிதத்திற்கான நோபல் பரிசு என கருதப்படுகிறது. 4 பேருக்கு: இந்த ஆண்டிற்கான விருது டில்லியில் பிறந்து ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்த அக்ஷய் வெங்கடேஷ்(36) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரை தவிர, ஈரானை சேர்ந்த சாஷர் பிரகார்,ஜெர்மனியை சேர்ந்த பீட்டர் ஷோல்ஸ், இத்தாலியை சேர்ந்த அலிசியோ பிகலி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் ரூ.7 லட்சத்தி 89 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் டில்லியில் பிறந்த வெங்கடேஷ், தனது 2 வயதில் பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தார். 12வயதிலேயே இயற்பியல் மற்றும் கணிதத்திற்கான ஒலிம்பியாட்ஸ் போட்டியில் கலந்து கொண்டார்.
13 வயதில் பள்ளிபடிப்பை முடித்த அவர், மேற்கு ஆஸ்திரேலிய பல்கலையில் கணிதத்திற்கான பட்டத்தை 16 வயதில் பெற்றார். 20 வயதில் பிஎச்டி முடித்த அவர், தற்போது ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

No comments:
Post a Comment
Please Comment