ஆதாரின் மூலம் அடையாளத்தை உறுடிசெய்ய கைரேகையுடன் புகைப்படமும் எடுக்க வேண்டும் என ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கிச் சேவைகள், சிம் கார்டுகள் வாங்குதல் உள்ளிட்ட பல சேவைகளுக்கு ஆதார் மூலம் அடையாளம் வழங்கப்படுகிறது.
அந்த அடையாளத்தை உறுதிப்படுத்த கைரேகை பதிவு வைக்கப்படுகிறது. சமீபத்தில் கைரேகையை பிரதி எடுத்து ஒருவர் ஏமாற்றி பல சிம்களை ஆக்டிவேட் செய்தது தெரிந்ததே.
இது போன்ற மோசடிகளை தடுக்க கைரேகையுடன் புகைப்படம் எடுத்து அதுவும் பொருந்துகிறதா என சோதிக்க வேண்டும் என ஆதார் தெரிவித்துல்ளது.
மேலும் இது குறித்த தனது சுற்றறிக்கையில் வயதானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள் ஆகியோரின் கைரேகைகளை உறுதிப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் புகைப்படம் எடுப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment