விடுமுறை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விடுமுறை





தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளது.


இது வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கடலோர மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.

கன்னியாகுமரியில் நேற்று இரவில் இருந்து மழை பெய்கிறது. அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் தீவுகள் போல மாறி வருகின்றன. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அங்கு மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரஷாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட கலெக்டர் திவ்யா.

கனமழை காரணமாக நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்  இன்னசென்ட் திவ்யா.

No comments:

Post a Comment

Please Comment