தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளி என 32 மாவட்டங்களில் 32 மாதிரிப்பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாதிரிப்பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
மாதிரிப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியில் கல்வி பயிற்றுவிக்கப்படும்; ப்ரீ கேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் இருக்கும் என்று செங்கோட்டையன் கூறினார். கணினி மையம், நவீன ஆய்வகங்கள், விளையாட்டு திடல், நவீன கழிவறை போன்ற சிறப்பம்சங்களும் இருக்கும் என்றார். பாலியல் தொந்தரவு, ஆசிரியரால் பிரச்னை என, மாணவ, மாணவிகள் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்னைகளை 1477 என்ற ஹெல்ப்லைனில் கூறி, தீர்வு காணலாம் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment
Please Comment