ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசு உதவி தொகை கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசு உதவி தொகை கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள் அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் ஒருவருக்கு ரூ.2 லட்சம் நிதிஉதவி வழங்கும் திட்டத்தின்கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்ப படிவங்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். 






இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியன இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்ப படிவங்களை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் 'ஜெருசேலம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்' என்று குறிப்பிட்டு வருகிற 10.9.2018க்குள் 'மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, (5-வது தளம்), சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கிறிஸ்தவர்கள் தமிழக அரசின் இச்சிறப்பு திட்டத்தில் பங்கு பெற்று பயன் பெறலாம் என திருச்சி கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment