ஐ.டி.ஐ., சேர்க்கைக்கு 3வது கலந்தாய்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஐ.டி.ஐ., சேர்க்கைக்கு 3வது கலந்தாய்வு

மதுரை மாவட்ட அரசு, அரசு உதவி பெறும், தனியார் ஐ.டி.ஐ.,க்களில் காலியான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கவுள்ளது.மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 8, 10, 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம். மாநிலத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், 






தொழிற் பிரிவுகள், சேருவதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்கள் இணையதள விளக்க கையேட்டில் உள்ளது.அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேருவோருக்கு மாதம் 500 ரூபாய், பஸ் கட்டண சலுகை, இலவச சைக்கிள், மடிக்கணினி, பாடபுத்தகங்கள், வரைபட கருவிகள், இரு செட் சீருடைகள், ஒரு செட் காலணிகள் வழங்கப்படும். செப்., 12 விண்ணப்பிக்க கடைசி நாள். விவரங்களுக்கு 0452-- 256 6183.

No comments:

Post a Comment

Please Comment