அதிகரிக்கும் மாணவர்களின் இதயத்துடிப்பு!'- காபிக்குத் தடைவிதித்த அதிகாரிகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அதிகரிக்கும் மாணவர்களின் இதயத்துடிப்பு!'- காபிக்குத் தடைவிதித்த அதிகாரிகள்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான நல் உறவை மேம்படுத்த, பள்ளிகளில் காபி விற்பனைக்குத் தடைசெய்துள்ளது, தென் கொரியா அரசு.
'தென்கொரியாவில் உள்ள ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விற்பனைசெய்யப்படும் உணவு, தின்பண்டங்களுடன் காபி விற்பனைசெய்யக் கூடாது' என உணவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 14-ம் தேதி முதல் உத்தரவு அமலுக்குவருகிறது.



அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளைப் போலவே, தென்கொரியாவிலும் கல்வியில் சிறந்துவிளங்க மாணவர்களிடம் பலத்த போட்டி நிலவுகிறது. மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு படித்துவருகின்றனர். தங்களது சோர்வைத் தடுக்க படிப்பு நேரத்துக்கிடையே காபி அல்லது எனர்ஜி டிரிங் குடிப்பதை மாணவர்கள் வழக்கமாகக்கொண்டுள்ளனர். இதனால், மாணவர்களின் உடல் நிலை பாதிக்கப்படுகிறதாம்.

தென்கொரியாவில், காபியை அதிகமாகக் குடிக்கும் மாணவர்களின் இதயத்துடிப்பு அதிகரிப்பதாக ஊடகங்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில், பள்ளிகளில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை மாணவர்கள் உட்கொள்வதைத் தடுக்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அளவுக்கு அதிகமாக காபி அருந்துவதால் தூக்கமின்மை, மயக்கம் மற்றும் தலைசுற்றல் அதிகரிப்பதாகவும், இதயத்துடிப்பு, நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, பள்ளிகளில் காபி விற்பனையைத் தடைசெய்துள்ளது தென்கொரியா.

No comments:

Post a Comment

Please Comment