இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் வரும் 2022ம் ஆண்டுகள் மனிதனை விண்வெளிக்கு அனுப்படும் என்று 72வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து, இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக இஸ்ரோவும் அறிவித்தது.
இந்நிலையில், இதற்காக இந்தியாவிலேயே விண்வெளிக்கு அனுப்படும் தளவாட பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று இஸ்ரோ நங்கூரம் போட்டுள்ளது.
இஸ்ரோ:
இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ என்று அழைக்கப்படுகின்றது. தற்போது ஜிஎஸ்எல்வி, பிஎஸ்வி ராக்கெட்களும், கிரயோஜெனிக் இன்ஜின்களும் தற்போது வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பிறகு, சந்திராயன்-1 விண்கலமும், மங்கள்யான் விண்கலமும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சந்திராயன்-1 கண்டறிந்த நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சத்திய கூறுகள் இருக்கின்றது என்று கூறியது.
நிருப்பித்த நாசா:
நிலவில் வடதுருவ பகுதியில், சந்திராயன்-1 படம் பிடித்து அனுப்பியபடி அங்கு தண்ணீர் உரைந்து நீர் கட்டிகளாக இருக்கின்றது என்று தெரிவித்தது. இதை நாச விஞ்ஞானிகளும் நேற்று முன்தினம் உறுதிபடுத்தினர். இதனால் பல்வேறு நாடுகளின் பார்வையும் இந்தியாவின் மீது உள்ளது. இஸ்ரோவும் பல்வேறு நாட்டு செயற்கைகோள்களை விண்வெளிக்கு வர்த்தக ரீதியாக செலுத்தி வருகின்றது. இதிலும் வெற்றி கண்டுள்ளது. மேலும் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் ஒருபடி உயர நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் மோடி அறிவிப்பு:
இந்நிலையில், கடந்த 72ம் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 2022ம் ஆண்டுகள் இந்திய விண்வெளி ஆய்ராய்ச்சி நிறுவனம் சார்பில், மனிதனை விண்ணுக்கு அனுப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து பல்வேறு நாடுகளும் இந்தியாவின் முயற்சிக்கு வாழ்த்துகளையும், படைக்க இருக்கும் சாதனைகளையும் அச்சரமாக ஊக்கப்படுத்தின. இது இந்தியா முதன் முதலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும்.
இஸ்ரோவும் தயார்:
இதைத்தொடர்ந்து, இஸ்ரோ சார்பில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவனும் தெரிவித்தார். மேலும், விண்வெளிக்கு மனிதனை அனுப்புதல், மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட்டை தயாரித்தல், புவிக்கு மீண்டும் திரும்பும் விண்வெளி ஓடங்கள் தயாரித்தல் ஆகிய திட்டங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஈடுபட்டுள்ளதாக சிவன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உள்நாட்டில் தயாரிக்க இஸ்ரோ நங்கூரம்:
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்த்து உள்நாட்டியே தயாரிக்க வேண்டும். இப்படி தயாரித்தால் பெருமளவு செலவுகள் குறைவும் என்றும் சிவன் தெரிவித்தார். இதனால் விண்வெளித்துறைக்கு தேவையான பொருட்களை உள் நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என சிவன் நங்கூரம் போட்டார்.
No comments:
Post a Comment
Please Comment