*மகளிருக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி 40 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.*
_மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி, லீக் சுற்றில் 3-வது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய போட்டியில், இத்தாலி அணியை எதிர்கொண்டது._
_இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது._
_வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் அயர்லாந்தை இந்தியா எதிர்கொள்ள உள்ளது._
_உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில், இந்திய மகளிர் அணி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னதாக 1978-ம் ஆண்டில் காலிறுதிக்கு முன்னேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது._
No comments:
Post a Comment
Please Comment