வாழ்த்துக்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வாழ்த்துக்கள்


ஆகஸ்ட் 15 புனிதமான நாள்: ஜனாதிபதி சுதந்திரதின வாழ்த்து


ஆகஸ்ட் 15 அனைத்து இந்தியர்களுக்கும் புனிதமான நாள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திரதின உரையில் குறிப்பிட்டுள்ளார்.


நாளை(ஆக.,15) நாட்டின் 72வது சுதந்திரதினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.


தியாகிகளை நினைவு கூர்வோம்:


அவரது உரை : ஆகஸ்ட் 15 ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான நாள். நாட்டு மக்கள் அனைவருக்கும் 72வது சுதந்திர தின வாழ்த்துக்கள். தியாகிகள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து இந்த சுதந்திரத்தை பெற்றுத்தந்துள்ளனர். சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகளை நாம் நினைவுகூர வேண்டும். அவர்கள் நினைத்தது போல் நாட்டை கட்டமைக்க வேண்டும்.



விவசாயிகள், ராணுவ வீரர்கள்..
நாட்டு மக்களுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். குளிர், மழை பாராமல் எல்லையில் நின்று நம்மையும், நம் நாட்டையும் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். பாதுகாப்புப்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. விவசாயிகள், ராணுவ வீரர்களுக்கு நாம் உதவும் போது நமது சுதந்திரம் மேலும் வலுப்பெறும்.


பெண்களுக்கு முழு சுதந்திரம்:


கல்வியோ, பணியோ, பெண்கள் தங்களது பாதைகளை தேர்தெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்கள், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். வறுமை ஒழிப்பு, வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை நோக்கி நாம் உழைக்க வேண்டும். ஏழைகள் வறுமையில் விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காந்திக்கு புகழாரம்:


நமது நாட்டை பிரதிபலிப்பது தான் மூவர்ண கொடி ஆகும். உலக அமைதிக்கான குறியீடாக மகாத்மா காந்தியடிகள் விளங்கியுள்ளார். உலகையே தனது நாடாக, குடும்பமாக காந்தியடிகள் கருதினார். அவர் கற்பித்த பாடங்கள் இன்னும் தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment