இனி பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் செலுத்த, அதிக நேரம் வரிசையில் நின்ற நிலைக்குச் சொல்லுங்கள் குட் பாய். புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஒரு புது வழி முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்.
இதுவரை உங்கள் பணப்பரிவர்தனைகளை மொபைல் போன், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் செலுத்தி வைத்த நிலையில், ஒரு புதிய வழி பரிவர்த்தனையை செயல்படுத்தத் துவங்கியுள்ளது இந்தியாவின் முன்னணி எரிபொருள் விற்பனையாளரான இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL).
எரிபொருள் நிலையங்களில் ஏடிஎம் போன்றே மைக்ரோ ஏடிஎம் இயந்திர அமைப்பை அமைத்துள்ளது ஐஓசி.
ஐஓசி, இந்தச் சேவைக்காக ஆக்ஸிஜன் மைக்ரோ ஏஜென்சி மற்றும் ஐடிஎஃப்சி வங்கி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்களை ஏற்கனவே போபால் இல் உள்ள இரண்டு ஐஓசி நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தச் சேவை நாடு முழுவதும் மற்ற எரிபொருள் நிலையங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய இயந்திரங்கள் பணம் செலுத்தும் வசதியை விரைவுபடுத்துவதற்கு, பயோமெட்ரிக் மூலம் விரைவான கட்டைவிரல் உணர்வைக் கொண்டு கட்டணத்தைச் சரியாக வசூலிக்கின்றன.
ஆக்சிஜன் மைக்ரோ ஏடிஎம் என்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்திரமாகும்.
இந்த இயந்திரங்கள் உபிஐ, பிஐஎம் ஆதார் பரிவர்த்தனை மற்றும் பாரத் கியூஆர் கோட் போன்ற பரிவர்த்தனைகள் செய்கிறது. பணம் செலுத்த பயனர்கள் தங்கள் விரல் ரேகை வைத்தால் மட்டும் போதும்.
எரிபொருள் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கு இந்தச் சேவை உதவியாக இருக்குமென ஐஓசி தெரிவித்தது. குறிப்பாக உச்ச நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையைச் சரி செய்யவேண்டும் என்பதற்காக, இந்தச் சேவையை செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக ஐஓசி தெரிவித்துள்ளது.
இதிலும் பெட்ரோல் பங்க் ஊழியர் கணினியில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தேய்க்க வேண்டியிருக்கும் போது நிலைமை இன்னும் மோசமாகி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிருக்கிறது. இனி ஒரு விரைவான கட்டைவிரல் அழுத்தம் போதும் பணம் செலுத்த.

No comments:
Post a Comment
Please Comment