இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த புதிய மாணவர்கள், &'வாட்ஸ் ஆப், பேஸ்புக்&' போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டும்&' என, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதுவரை சேர்ந்த மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கியுள்ளன. சென்னை, அண்ணா பல்கலையின், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி ஆகியவற்றில், நேற்று வகுப்புகள் துவங்கின. முதல் நாளான நேற்று, மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் கல்லுாரிக்கு வந்தனர். அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில், ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், கிண்டி இன்ஜி., கல்லுாரி முதல்வர், டி.வி.கீதா உள்ளிட்ட பேராசிரியர்கள், பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.
அவர்கள் கூறியதாவது: பள்ளி படிப்புக்கு நேர்மாறாக, கல்லுாரி படிப்பு இருக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதுடன், சுயமாக சிந்தித்து, தேர்வுகளில் விடை எழுத வேண்டும்.பல்வேறு ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். நுாலகங்களையும், ஆய்வகங்களையும், அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். மூத்த மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட அனைவரிடமும், நன்றாக பழக வேண்டும்.
&'ராகிங்&' போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாக பேராசிரியர்கள் மற்றும் கல்லுாரி முதல்வரிடம், அச்சமின்றி புகார் தெரிவிக்க வேண்டும்.&'வாட்ஸ் ஆப், பேஸ்புக்&' போன்ற சமூக வலைதளங்களை, கல்லுாரி வளாகங்களில் பயன்படுத்தக்கூடாது. வகுப்புகளில், மொபைல் போனை பயன்படுத்த வேண்டாம்.மொபைல் போனில் நேரத்தை செலவழிப்பதற்கு பதில், நுாலகங்களிலும், வகுப்புகளிலும் புத்தகங்களை படிப்பதில், அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.
ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, மாணவர்கள் ஒவ்வொருவரும், தினமும் தவறாமல், நாளிதழ்களை படிக்க வேண்டும். அதன் வாயிலாக மட்டுமே, நாட்டு நடப்பையும், உலக நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
Please Comment