'மொபைல் டேஞ்சரஸ்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'மொபைல் டேஞ்சரஸ்!


'மொபைல் போன்' போதையிலிருந்து மீள வழிகூறும், மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா:நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றாக, மொபைல் போன் இடம் பிடிக்கத் துவங்கி இருக்கிறது. பெரியவர், சிறுவர் என, அவரவர் வயதுக்கு ஏற்ப மொபைல்களை பயன்படுத்துகின்றனர்.'அதீதமான மொ பைல் பயன்பாட்டால், உடலளவிலும், மனதளவிலும் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்' என, பல்வேறு ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன.கண் எரிச்சல், தலைவலி போன்ற உடலளவில் உண்டாகும் பாதிப்பை, உணர்ந்து கொள்கிறோம்; ஆனால், மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை உணர்வதில்லை.





இதிலிருந்து வெளிவர முடிவு செய்தால், முதலில், மொபைலில் தேவையில்லாமல் எவற்றை பயன்படுத்துகிறோம் என்பதை கண்டறிந்து, தவிர்த்து விடுவது முக்கியமானது.திரையில் தோன்றும் அறிவிப்புகள், நம் கவனத்தை, மொபைல் பக்கம் திருப்பும். எனவே, அவற்றை, தடை செய்வது நல்லது. இரவில் துாங்கும் போது, 'டோன்ட் டிஸ்டர்ப்' என்ற வசதியை பயன்படுத்தலாம்.மொபைல் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உள்ள, செயலிகள் மூலமாக, அடிப்படை வசதிகளை மட்டும் பயன்படுத்த அனுமதித்து, மற்றவற்றை, பார்க்க முடியாத வகையில் தடை செய்யலாம்.இதில், நேரத்தை குறிப்பிட்டு வைத்தால், அந்த நேரத்தில், மற்ற செயலிகளை பயன்படுத்த முடியாமல், தடை செய்து விடும்.நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்திருப்பது, மொபைல் போனை பயன்படுத்த துாண்டக்கூடும்.




 எனவே, முடிந்த வரை தனிமையை தவிர்க்கலாம்.ஒரு மனிதன் காலையில் எழுந்த பிறகான, 60 நிமிடங்களும், இரவு துாங்குவதற்கு முன்பான, 60 நிமிடங்களும் மிக முக்கியமானவை. எனவே, அந்த நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.'இந்த நேரத்தில் மொபைலை பயன்படுத்தக் கூடாது' என முடிவெடுப்பதோடு, அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், குறிப்பிட்ட நேரத்தில், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம்.மொபைலை பயன்படுத்த துாண்டுவதில், சமூக ஊடகங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. இது தவிர, மொபைலில் இருக்கும், பொழுதுபோக்கு, செயலிகளும் நம் கவனத்தை திசை திருப்பக்கூடும்.மொபைலை அதிகமாக பயன்படுத்துகிறோம் என்ற சந்தேகம் எழுந்தால், அது தொடர்பான செயலிகளை, உடனடியாக நீக்கி, அவற்றிலிருந்து விலகி விடுவதுநல்லது.மொபைல் பயன்பாட்டை குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, சாதாரண வகை மொபைலுக்கு திரும்புவது. இது, நிரந்தரமாக சாத்தியமில்லை என்றாலும், சில நாட்களுக்காவது, ஒரு மாறுதலுக்காக, வசதிகள் குறைவாக உள்ள, இந்த வகை மொபைல் போன்களை பயன்படுத்தலாம்.'





No comments:

Post a Comment

Please Comment