நுகர்வோர் மின்சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பான லித்தியம்-அயன் பேட்டரிகளை தீப்பிடிக்காத வகையில் உருவாக்க நினைத்திருந்த நிலையில், ஆராய்ச்சி குழுவினர் குறைந்த விலையில் செயல்படக்கூடிய தீப்பிடிக்காத பேட்டரிகளை உருவாக்கியுள்ளனர்.
ஒரு லித்தியம்-அயன் பேட்டரியில், மெல்லிய பிளாஸ்டிக் இரண்டு எலெக்டிரோடுகளையும் பிரிக்கும். பேட்டரி பாழாகி இருந்தால், பிளாஸ்டிக் தடுப்பான் பாதிக்கப்பட்டு எலெக்டிரோடுகளை ஒன்றிணைய காரணமாகின்றன, இவை பேட்டரியின் திரவு எலெக்ட்ரோலைட் தீப்பிடிக்க வைக்கின்றன என்று கேப்ரியல் வெய்த் தெரிவித்தார். இவர் அமெரிக்க சக்தி துறையின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தை சேர்ந்தவரும், திட்டத்தின் ஆய்வாளருமான கேப்ரியல் வெய்த் தெரிவித்தார்.
பேட்டரிகளை பாதுகாப்பானதாக மாற்ற, சில ஆராய்ச்சியாளர்கள் வெடிக்காத, திடமான எலெக்ட்ரோலைட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இவற்றை உற்பத்தி செய்ய சமீபத்திய வழிமுறைகளில் ரீடூலிங் செய்யப்பட்ட பேண்டும்.
இதற்கு மாற்றாக, வெய்த் குழுவினர் வழக்கமான எலெக்ட்ரோலைட் உடன் மற்றொரு பொருளை கலந்து பாதிக்கப்பாடத வகையிலான எலெக்ட்ரலைட்களை உருவாக்க முடிவு செய்தனர். பேட்டரி கீழே விழுந்தாலோ அல்லது உரசினாலோ எலெக்டிரோடுகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
எலெக்டிரோடுகள் ஒன்றொன்றை தொடாமல் இருந்தால் பேட்டரிகளில் தீப்பிடிக்காது. பேட்டரியில் கூடுதலாக ஒரு பொருளை கலந்தாலும், வழக்கமான பேட்டரிகளை உற்பத்தி செய்வதில் இருந்து மாறுப்படும் என வெய்த் தெரிவித்தார். அழுத்தம் நீங்கியதும் மீண்டு திடமானது, திரவமாகிவிடும்.
இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க வேதியல் அமைப்பின் 256-வது தேசிய கலந்தாய்வு மற்றும் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு பாஸ்டன் நகரில் ஆகஸ்டு 22-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Please Comment