10ம் வகுப்பு அசல் சான்றிதழ் 16ம் தேதி முதல் விநியோகம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
சென்னை: கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம்
தெரிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பு:கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் 16ம் தேதி(வியாழன் கிழமை) அன்று காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
Please Comment