நர்சிங், பார்மசி முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நர்சிங், பார்மசி முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை

இந்திய ராணுவத்தின் துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான எஸ்எஸ்பி என அழைக்கப்படும் சாஸ்திரா சீமா பல் (Sashastra Seema Bal) படைப்பிரிவில் காலியாக உள்ள 181 சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஹெட்கான்ஸ்டபிள் தரத்திலான துணை மருத்துவ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்தம் காலியிடங்கள்: 181


காலியிடங்கள் விவரம்: 


1. நர்சிங் படித்த பெண்கள் - 23 (சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலானது பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்)
2. பார்மசிஸ்ட் - 18 (உதவி சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலானது)
3. ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன் - 02
4. டென்டல் டெக்னீசியன் - 02
5. ரேடியோகிராபர் - 08
6. ஸ்டெனோகிராபர் - 54
7. ஹெட்கான்ஸ்டபிள் - 74
தகுதி: பிளஸ்-2 படிப்புடன் ஜெனரல் நர்சிங், பார்மஸி, ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன், டென்டல் ஹைஜீனிஸ்ட், ரேடியோ டயக்னாஸிஸ் டிப்ளமோ, ஸ்டெனோகிராபர் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 09.09.2018 தேதியின்படி ஒவ்வொரு பிரிவு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.


கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ssbrectt.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssbrectt.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Please Comment