இனி அனைத்து டோல்பூத்திலும் ஃபாஸ்ட்டேக்.. சர்ருன்னு போகலாம்.. கட்கரி அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இனி அனைத்து டோல்பூத்திலும் ஃபாஸ்ட்டேக்.. சர்ருன்னு போகலாம்.. கட்கரி அறிவிப்பு

டிசம்பருக்குள் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
பொதுவாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது பயணிகள் அல்லல்பட்டும் ஒரே இடம் சுங்கசாவடிகள்.


எப்போதும், சுங்கசாவடிகளில் நின்று பயண சீட்டு பெரும் பயணிகளின் நேரம் மட்டும் அல்லாமல் அவர்களின் உடல் நிலையும் பலநேரங்களில் வீணாகிறது எது பயணம் மேற்கொள்ளும் அணைத்து பயணிகளுக்குமே தெரியும்.


இந்நிலையில் சாலையில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். ஆகவே தான் வாகனஓட்டிகள் ஃபாஸ்ட்டேக் மூலம் ஆன்லைனில் பணம்செலுத்தி அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இதனால் ஃபாஸ்ட்டேக் அட்டை வைத்துள்ளவர்கள் சுங்கச்சாவடிகளில் வரிசை கட்டி நிற்க வேண்டிய அவசியமில்லை.


பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கும் விரைவாகவும் செல்ல முடியும். இந்த சேவை நாட்டில் சில இடங்களில் உள்ள சுங்கசாவடிகளில் இருந்தாலும் நாடு முழுவதும் இந்த வசதி எற்படுத்தி தரப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி இருக்கிறார்

No comments:

Post a Comment

Please Comment