இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க உதவும் ஜிசாட் 11 செயற்கை கோளை நவம்பர் 30-ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மார்ச் இறுதியில் ஏவப்பட்ட ஜிசாட் 6A செயற்கை கோள் சில தினங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்துள்ளது.
இதன் காரணமாக ஜிசாட் 11 செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நாள் தள்ளிப்t போனதாக கூறப்படுகிறது. ஜிசாட் 11 ஆனது 5700 கிலோ எடைக் கொண்டது என்பதால் இதை இந்தியாவில் இருந்து ஏவ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பிரான்ஸ் கையானவில் உள்ள ஐரோப்பியன் விண்வெளி மையத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படிt நவம்பர் 30-ம் தேதி ஜிசாட் 11 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இணையதள சேவையின் வேகத்தை அதிகரிக்க இந்த செயற்கை கோள் உதவும் என விஞ்ஞாணிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
Please Comment