தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு.! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்.!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு.! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்.!!

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக, தமிழக சிறுபான்மையினர் நல இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ''தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புt முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும், சிறுபான்மையின பள்ளி மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்புக்கான, கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.


இதனை பெற தேசிய கல்வி உதவித்தொகை இயக்கத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.scholarships.gov.in என்ற இனைய முகவரின் சென்று விண்ணப்பித்துt கொண்டு உதவி தொகையை பெற்று கொள்ளலாம்.
கடந்த 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்:- 


* 54259 இஸ்லாமியர் மாணவ மாணவியர்களுக்கும்,
* 56682 கிறிஸ்தவர் மாணவ மாணவியர்களுக்கும்,
* 187 சீக்கியர் மாணவ மாணவியர்களுக்கும்,
* 144 பவுத்தர் மாணவ மாணவியர்களுக்கும்,
* 1145 ஜெயின் மாணவ மாணவியர்களுக்கும்,
* 2 பார்சி மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் 112419 மாணவ மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த உதவி தொகையை பெற தாங்கள் படித்த வகுப்பின் முந்தைய ஆண்டில்t 50 %-க்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்''. என தமிழக சிறுபான்மையினர் நல இயக்ககம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment