அமேசான் வழங்கும் சுதந்திர தின தள்ளுபடி விற்பனை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அமேசான் வழங்கும் சுதந்திர தின தள்ளுபடி விற்பனை!





ஆகஸ்ட் மாதம் வந்தாச்சு! இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகிவிட்டோம். அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் 9 முதல் 12 வரை நான்கு நாட்களுக்குச் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை வழங்கி இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட 20,000 பொருட்களைத் தள்ளுபடி விலையில் விற்பதற்கு அமேசான் தயாராக உள்ளது.


இந்த விற்பனை ஆகஸ்ட் 9 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு 11.59 வரை இருக்கும். இந்த விற்பனையின் பொழுது அமேசான் புதிய பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதோடு, Huawei, Honor, Samsung, Vivo, RealMe, 10.Or போன்ற புகழ்ப் பெற்ற நிறுவனங்களின் மொபைல் போன்களையும் விற்கிறது.


SBI வங்கியின்t கிரடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும் பொருட்களின் மீது கூடுதலாக 10% கேஷ் பேக் ஆஃபரும் உண்டு. சில குறிப்பிட்ட வங்கிகளின் டெபிட் கார்டுகளுக்கு மாதத் தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியும் உண்டு. Amazon Echo devices, Fire TV Stick and Kindle e-readers ஆகியவற்றறையும் இந்த சிறப்பு விற்பனையின் போது தள்ளுபடி விலையில் பெறலாம்.



" இந்திய மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற நிறுவனமாகத்t திகழும் அமேசான், அனைத்துச் சிறப்பு தினங்களையும் வாடிக்கையாளர்களோடு சேர்ந்து கொண்டாட விரும்புகிறது. இந்தக் காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு எது தேவையோ அவற்றைத் தள்ளுபடி விலையில் வழங்குகிறது.


புதிய பொருட்கள், சிறந்த சலுகைகள், ரொக்கமாகப் பணம் திரும்பப் பெறும் சலுகை, வட்டியில்லா மாதத் தவணை முறை, எக்சேஞ்ச் வசதி போன்றவற்றோடு இந்தச் சுதந்திர தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட அமேசான் காத்திருக்கிறது" என்கிறார், அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் மனீஸ் திவாரி.




ஏற்கனவே இந்த ஆண்டு ஜீலை மாதத்தில் இரண்டாவது 'Prime Day' விற்பனையைt நடத்தி முடித்திருக்கிறது அமேசான் நிறுவனம். இந்த விற்பனை 17 நாடுகளில் ஜீலை 16, 17 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Please Comment