தலைமை செயலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய முதலமைச்சர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தலைமை செயலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய முதலமைச்சர்



பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர் 11 லட்சத்து 78,000ம் பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றை மாணவர்களுக்கு வழங்கும் அடையாளமாக சென்னை தலைமை செயலகத்தில் 16 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் சைக்கிள்களை வழங்கினார். 

இதனை தொடர்ந்து, 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் துவங்கி வைத்தார். ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. அதற்கு மாற்றுப்பொருட்களாக பயன்படுத்தப்பட இருக்கும் பொருட்களையும் முதலமைச்சர் அறிமுகம் செய்துள்ளார்.பிளாஸ்டிக் தீமைகளை விளக்கும் வகையிலான இணையதளம் மற்றும் செயலியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

No comments:

Post a Comment

Please Comment