2020ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
புதிய முறைப்படி, மாணவர்கள் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து பதில் எழுதுவதை தவிர்க்க, பகுப்பாய்வுத் திறனை சோதிக்கும் வகையில் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். பெரும்பாலும், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கேள்விகளும், 1 முதல் 5 மதிப்பெண்கள் வரையிலான கேள்விகளுமே அதிகம் கேட்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் படிக்கும் தொழில்முறை பாடங்களின் தேர்வுகளை பிப்ரவரி மாதமே நடத்தி, மற்ற முக்கிய பாடங்களுக்கு மார்ச் மாதம் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வுத்தாள்களை திருத்தி மதிப்பிட கூடுதல் அவகாசம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் முன்கூட்டியே தேர்வு முடிவுகளையும் வெளியிட முடியும் எனக் கூறுகின்றனர். இந்தப் பரிந்துரைகள் மீது மேலும் ஆலோசனை நடத்தப்பட்டு பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment