தமிழக வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட 9 க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள்:
* வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது,
* வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல்,
* வாக்காளர் பட்டியல் குளறுபடி
* பூத் முகவர்கள் நியமனம்
* வாக்காளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல் திருத்தம் மற்றும் நீக்கம் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தலைமை தேர்தல் அதிகாரி கூறியதாவது:-
வரும் ஜனவரி 1-ஆம் தேதியுடன், 18-வயது நிறைவடைவோர் தங்களது பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க வசதியாக வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் நாளை செப்டம்பர் 1 முதல் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.திருத்தப் பணிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.
திருத்த பணிகள் முழுவதுமாக முடிவுற்ற பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும்.தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் முகாம் வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 23 மற்றும் அக்டோபர் 7, 14-ஆகிய தேதிகளில் நடைபெறும். இதை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் சுமார் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும்.
திருத்திய இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற, 2019 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment