2019ஆம் ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி அறிவிக்கப்படும் பத்ம விருதுகளுக்காக விண்ணப்பிக்க / பரிந்துரைக்க வருகிற செப்டம்பர் 15ந்தேதி கடைசி நாளாகும்.
கடந்த மே 1-ந்தேதி இதற்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் பெறத் துவங்கியதிலிருந்து இணையதளம் மூலமாக இதுவரை 21,855க்கும் மேற்பட்ட பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 21,228 விண்ணப்பங்களுக்கான பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன.
மத்திய அரசு துறைகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், பாரத் ரத்னா மற்றும் பத்மவிபூஷன் விருது பெற்றவர்கள், உயர் சிறப்பு கல்வி நிறுவனங்கள் போன்றவை விருதுக்கு விண்ணப்பிப்போரை பரிந்துரைக்கலாம். எனவே, விருது பெறும் அளவுக்கு சாதனைப் படைத்த அல்லது பல்வேறு துறைகளில் சிறப்புமிக்க பணியாற்றும் நபர்களின் பெயர்களை பரிந்துரைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

No comments:
Post a Comment
Please Comment