இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் அவகாசம் நீட்டிப்பு
இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில், விருப்ப பதிவு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு
தமிழக அரசு, நேற்று விடுமுறை அறிவித்ததால், இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
இதன்படி, மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கில், ஆன்லைனில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு, ஒப்புதல் தருவதற்கான அவகாசம், இன்று பகல், 12:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இறுதி இட ஒதுக்கீடு உத்தரவை, இன்று மாலை, 5:00 மணிக்கு, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்
நான்காம் சுற்று மாணவர்களுக்கு, கவுன்சிலிங் கட்டணம் செலுத்தும் அவகாசம், இன்று பகல், 12:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
நான்காம் சுற்று விருப்ப பதிவு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு தான் துவங்கும். ஐந்தாம் சுற்றுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
Please Comment