*உலகின் மிக உயரமான மின்கோபுரங்களை அமைக்கிறது சீனா!*
உலகின் மிக உயரமான மின்கோபுரம் அமைக்கும் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. ஷிஜியாங் ((Zhejiang)) மாகாணத்தில் உள்ள சௌஷான் நகரத்தில் ((Zhoushan)) இந்த மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 380 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் இந்த மின் கோபுரங்களில், தற்போது 300 மீட்டர் உயரத்திற்கான கட்டுமானப் பணியில் அந்நாட்டு பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அமைக்கப்பட்டு வரும் இரு மின் கோபுரங்களுக்கு இடையே எந்த பிடிமானமும் இல்லாமல் ஏறத்தாழ 2 ஆயிரத்து 656 மீட்டர் நீளத்திற்கு வயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தக் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Please Comment