வருகிறது ஆப்பிள் கார் மற்றும் ஆப்பிள் ரியாலிட்டி கண்ணாடி.!
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்துள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுதும் அதர்கென்று ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தயாரிப்புகள் பலவற்றை ஆப்பிள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு வழங்கிக்கொண்டே தான் இருக்கிறது.
ஐபோன், ஐபாட், ஐபேட், ஆப்பிள் வாட்ச் போன்ற தனது தயாரிப்பு பட்டியலில் புதிதாக இரண்டு தயாரிப்புகளை சேர்த்துள்ளதாக விவரங்கள் கசிந்துள்ளது. தனது அடுத்த பெரிய இலக்காக ரியாலிட்டி கண்ணாடிகள் மற்றும் ஆப்பிள் கார்களை விரைவில் வெளியிடப்போவதாக விவரங்கள் கிடைத்துள்ளது.
"ஆப்பிள் கார்"
மிங்-சி-குஓ என்ற பிரபல ஆய்வாளரின் ஆய்வின்படி ஆப்பிள் நிறுவனத்தின் "ரியாலிட்டி கண்ணாடி" 2020 ஆம் ஆண்டு பயனர்களின் பயன்பாட்டிற்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று ஆப்பிள் நிறுவனத்தின் "ஆப்பிள் கார்" 2023 இல் அறிமுகம் செய்யப்படுமென்று செய்திகள் கிடைத்துள்ளது.
திட்ட மதிப்பு அறிக்கை தகவல்
இதுவரை ஆப்பிள் தயாரிப்பு பற்றிய குஓஸ் இன் ஆய்வுகள் மிகத் துல்லியமாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் திட்ட மதிப்பு அறிக்கை பற்றிய தகவல்களையும் குஓஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

அதன்படி 2 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் ஆப்பிள் நிறுவனம் களத்தில் இருங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த 2 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பில் ஆப்பிள் கண்டிப்பாக ஆப்பிள் கார் தயாரிப்பில் இறங்குமென்று குஓ தெரிவித்திருக்கிறார்.
ஏஆர் கண்ணாடிகள்
ஏஆர் தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப புரட்சி என்று உறுதியான பின், ஆப்பிள் தனது ஏஆர் கண்ணாடிகள் தயாரிப்பில் மும்முரம் காட்டிவருகிறது. ஏற்கனவே ஏஆர் க்கான மிரட்டலான செயலில் இருக்கும் நிலையில் அதைப் பயன்படுத்தி பயனர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும் விதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ரியாலிட்டி கண்ணாடி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலிபோர்னியா சாலைகளில் ஆப்பிள் கார்
ஆப்பிள் நிறுவனம் அதன் கார் தயாரிப்பு பிரிவிற்கு ப்ராஜெக்ட் டைடன் என்று பெயரிட்டுள்ளதாகவும் கலிபோர்னியா சாலைகளில் ஆப்பிள் கார்களின் தன்னாட்சி சோதனை ஓட்டம், சோதனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தான் ஆப்பிள் கார் 2023 இல் நிச்சயம் வெளிவருமென்று உறுதியாகக் கூறியுள்ளார் மிங்-சி-குஓ.

No comments:
Post a Comment
Please Comment