32 மாவட்ட அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு துவங்கப்படும்: செங்கோட்டையன் தகவல்
சென்னை: சென்னை எழும்பூர் பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மாதிரிப் பள்ளி கட்டிடத்தை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அப்ேபாது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறோம். அதற்காக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாவட்டத்துக்கு ஒரு அரசு மேனிலைப்பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் ஒரு மாதிரிப் பள்ளி உருவாக்கப்படும். அவற்றில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மாதிரிப் பள்ளிகள் செயல்படும்.
No comments:
Post a Comment
Please Comment