Emis - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Emis

EMIS கொஞ்சம் படிங்க பாஸ்....


⭐EMIS ல் மாணவர் விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ததில் விடுபட்ட பதிவினை தற்பொழுது பதிவேற்றம் செய்து EMIS பணியினை முழுமையடையச் செய்யும் பணியினை தலைமை ஆசிரியர் பெருமக்கள் செய்துவருகிறார்கள்.*



*_அப்பணியினைச் செய்யும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:_*
*⚡Father Name, Mother Name கொடுத்திருந்தால் Guardian Name கொடுக்க தேவையில்லை,*
*⚡Email Id என்ற களத்தில் Student Father Email Id தெரிந்தால் பதிவு செய்யலாம் இல்லையென்றால் காலியாக விட்டுவிடலாம்,*



*⚡ Disability என்ற களத்தில் மாணவன் Disability ஆக இருந்தால் மட்டும் எந்த வகை Disability என்று குறிப்பிட வேண்டும், மற்ற மாணவர்களுக்கு அந்த களத்தில் எதுவும் குறிப்பிடாமல் காலியாக விடவும்,*
*⚡ஆதார் உள்ள மாணவர்களுக்கு கட்டாயம் ஆதார் எண் என்பதை கிளிக் செய்து கீழே வரும் கட்டத்தில் ஆதார் எண் பதிவு செய்திருக்க வேண்டும், ஆதார் எண் இல்லை என்றால் Not Applicable என்பதை கிளிக் செய்ய வேண்டும்.*
*_மீண்டும் நினைவூட்டல்:_*
*⭐தங்கள் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் விபரங்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்ததில் சில பதிவுகள் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ளது இதனால் EMIS பதிவு முழுமை அடையாமல் உள்ளது. அப்படி விடுபட்ட பதிவினை பதிவு செய்ய வேண்டும் என்று இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும், நமது கல்வி மாவட்ட மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும் மற்றும் நமது வட்டார வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களும் பணியினை இரண்டு நாட்களில் விரைந்து முடிக்கும் படி கூறியிருக்கிறார்கள்.*

*⭐27.08.2018 முதல் தங்களது பள்ளியில் உள்ள மாணவர்கள் விபரங்கள் அனைத்தும் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உள்ளார்கள், அப்படி ஆய்வு செய்யும் போது பதிவுகள் முழுமையாக பதிவு செய்யாமல் விடுபட்டிருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும், எனவே பதிவுகள் அனைத்தையும் சரிபார்த்து விடுபட்ட பதிவுகளை உடனடியாக பதிவேற்றம் செய்து முடிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர் பெருமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.*
*⭐மேலும் EMIS வலைதளத்தில் ஆசிரியர் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.*
*EMIS வலைதளத்தில் ஆசிரியர் விபரம் என்ற பக்கத்தில் புதியதாக பதிவு செய்யக்கூடாது, அதில் தங்கள் பள்ளி ஆசிரியர் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அப்பெயரின் அடிப்படையில் தற்பொழுது அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விபரங்களை மட்டும் பதிவு செய்தால் போதும், பணி மாறுதல் அல்லது பதவி உயர்வு போன்ற காரணங்களால் வேறு பள்ளிக்கு சென்றிருந்தால் அவர்களின் விபரங்களை தற்போது பதிவு செய்ய வேண்டாம்.*
*ஆசிரியர் பெயரினை கிளிக் செய்து வலது பக்கத்தில் Edit option ஐ கிளிக் செய்து Enableor Disable என்ற கட்டத்தை கிளிக் செய்து கீழே கேட்கப்பட்டுள்ள விபரங்களுக்கு உரிய விபரங்களை பதிவிட வேண்டும் அவற்றில் TEACHER CODE என்ற விபரத்திற்கு TPF NUMBER OR CPS NUMBER கொடுக்கவும்*
*⭐மேற்கூறிய பணிகளில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் _EMIS CO-ORDINATORS_ ஐ தொடர்பு கொண்டால் தங்களது சந்தேகம் தீர்க்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*

            *By,*
*_EMIS CO-ORDINATORS_*


No comments:

Post a Comment

Please Comment