Engineering - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Engineering

அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் செப். 1ல் பொறியியல் கல்லூரி முதலாண்டு வகுப்பு துவங்கும்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் 5 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள சர்வதேச நீச்சல் பயிற்சி குளம் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது

இதில் பங்கேற்ற தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அளித்த பேட்டி: தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இந்திய அளவில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 25.2 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 48.9 சதவீதமாக உள்ளது. கடந்தாண்டு இந்த சதவீதம் 46.4 ஆக இருந்தது

தமிழகத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட 506 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 77,000 இடங்கள் உள்ளன

இந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 2ம் கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது

இதுகுறித்த விவரங்களை அரசு சார்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். நீதிமன்றம் அனுமதி அளித்ததின் பேரில், வருகிற செப்டம்பர் 1ம் தேதி பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும்

தற்போது கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் படிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் அனுமதி வழங்கப்படும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கான தேவைகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து அனுமதியளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

Please Comment