Face identification - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Face identification

ஆதார் மூலம் சிம் வாங்கினால் இனி முகப்பதிவு கட்டாயம்



ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் கார்டு வாங்கும்போது, முகத்தை படம் பிடித்து அடையாளம் காணும் திட்டம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தற்சமயம், ஆதார் விவரங்களை சரி பார்க்க விரல் ரேகை பதிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ரேகை பதிவை குளோனிங் முறையில் எடுத்து ஏமாற்று வேலை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதையடுத்து, ஆதார் அட்டை எடுக்கும்போது பதியப்பட்ட (இகேஒய்சி) முகத்தையும், சிம் வாங்க வருபவரின் முகத்தையும் பொருத்திப் பார்த்து அடையாளம் காணும் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
ஹைதராபாதில் கடந்த ஜூன் மாதம், சிம் கார்டு விநியோகஸ்தகர் ஒருவர், வாடிக்கையாளர்களின் விரல் ரேகைகளை போலியாகப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளை செயல்படுத்திய (ஆக்டிவேஷன்) விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

No comments:

Post a Comment

Please Comment