11ம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
2018ம் ஆண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு சிறப்புத் துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2018, மேல்நிலை முதலாம் ஆண்டு சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 16ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
Please Comment