Free meals - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Free meals

120 மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கி அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்..!



கொடுங்கையூரில் இயங்கிவரும் உயர்நிலைப்பள்ளியில் 500 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு இளமாறன் என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து மயங்கி விழுவதை, தமிழ் ஆசிரியர் இளமாறன் கவனித்து வந்துள்ளார்.



ஏழை குடும்பத்தை சார்ந்த, மாணவர்களுக்கு காலை உணவு கூட சரியாக சாப்பிட முடியாமல் இருப்பதை அறிந்து, அவர் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் இடம் கூறியுள்ளார். இதற்கு தலைமை ஆசிரியரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் யார் என்று கண்டறிந்தார். இதில் 120 மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் வருவது தெரியவந்தது.



அந்த மாணவர்களுக்கு காலையில் இட்லி, பொங்கல் ஆகிய உணவுகளை ஆசிரியர் இளமாறன் தினமும் தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.
இது குறித்து தமிழ் ஆசிரியர் இளமாறன் கூறியவை:




மிகவும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை உணவு கொடுக்க முடிவு செய்தேன். அதன்படி அம்மா உணவகத்தில் ரூ.200க்கு இட்லி மற்றும் பொங்கல் வாங்குவேன். அதை பள்ளிக்கு எடுத்து வந்து மாணவர்களுக்கு பரிமாறுவேன்.



பொதுத்தேர்வில் இப்பள்ளி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. மேலும், இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியை தரும் என்று கூறியுள்ளார்


.
இதை, தொடர்ந்து பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்கள் தங்களது பிறந்த நாள், திருமண நாளில் அவர்களது செலவில் காலை உணவை இலவசமாக வழங்குகிறார்கள். மேலும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களும் உதவி செய்கின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment