Private - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Private

தனித்தேர்வர்கள் இனி நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியாது!


10ம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் இனி நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வைஎழுத முடியாது என அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னதாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருந்த நிலையில், கடந்த ஆண்டு 11ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. வரும் 2018-19 கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தனித்தேர்வர்களுக்கும் இந்த முறை பொருந்தும் என அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.



அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று வெளியிட்ட தகவலின்படி, "பிளஸ் 1 வகுப்பிற்கு கடந்தஆண்டுபொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், இனி தனித்தேர்வர்களும்பிளஸ் 1 பொதுத்தேர்வை முடித்துவிட்டபின்னர் தான்பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment