Independence day - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Independence day

சுதந்திர தினவிழாவில் பள்ளிகளில் மரக் கன்றுகள் நட வேண்டும்






தமிழகத்தில் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவையொட்டி அன்றைய தினம் மரக்கன்றுகள் நடுதல் வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது







இது தொடர்பாக தொடக்க கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளt சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது

நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்குகின்ற உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மிகச் சிறப்பான முறையில் ஆக.15 புதன்கிழமையன்று சுதந்திரதினவிழாவைக் கொண்டாட வேண்டும்
போட்டிகள் நடத்த வேண்டும்







இதையொட்டி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி அளவிலும், ஒன்றிய அளவிலும் மாணவர்களிடையேt நாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் வளர்க்கும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை நடத்த வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு சுதந்திர தினவிழாவில் பரிசுகள் வழங்க வேண்டும்


சுதந்திர தின விழா அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நடுதல் வேண்டும். மரக்கன்று நடுவதற்கு இடங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களை மரக் கன்றுகளை நட்டு அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்
பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் வனத் துறையுடன் தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று பள்ளி வளாகத்தில் நடச் செய்ய வேண்டும்








மேலும் பள்ளிகளில் அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். நாட்டுப் பற்று, பண்பாடு, கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என அதில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

Please Comment