Notice - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Notice


தமிழகம் பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1,000 ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்


பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1,000 ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 17ஏ பிரிவின் கீழ் ஆசிரியர்களிடம்  விளக்கம் கேட்டு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட 300 மாணவர்களுக்கும் பருவத்தேர்வு எழுத தடை விதித்துள்ளது.



கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசியர்களின் பட்டியலை தயாரித்து பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பினர்.
அதில் ஆசிரியர்கள் அஜாக்கிரதையாகவும், மெத்தனமாகவும் விடைத்தாள்களை திருத்தியுள்ளனர். மேலும் சரியான மதிப்பெண்களை வழங்காமல் கூட்டியோ, அல்லது குறைத்தோ வழங்கியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரிவு 17ஏ-வின் படி ஆசிரியர்களிடம்  விளக்கம் கேட்டு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விளக்கம் அளிக்காமல் இருந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment