Plus two - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Plus two

திருத்தப்பட்ட பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ் 27ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
26 August 2018, 1:07 am
புதுச்சேரி, ஆக. 26: புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:2018ம் ஆண்டு ஜூன், ஜூலையில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்பு துணை தேர்வு எழுதி, அதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் 27ம் தேதி பிற்பகலில் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் வருகிற 27ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment