மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
ஆக. 26: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் ஜூலை மாதத்திற்கான மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வரும் 31ம்தேதி காலை 8 மணி முதல் வ.உ.சி.பூங்கா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் பள்ளியில் படிக்கும் 6ம்வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
31ம்தேதி காலை 8 மணிக்குள் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
Please Comment