முகநூல் மூலம் 1000-ம் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முகநூல் மூலம் 1000-ம் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல்




முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் வீடியோக்களை கண்காணித்து நீக்குவதற்கான பணியில் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான புகாரையடுத்து, ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் சர்ச்சைக்குரியவை, ஆபாசம், தீவிரவாதம், குற்றம் தொடர்பான கருத்துகள் மற்றும் வீடியோக்களை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்காக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த உள்ளதாக ஃபேஸ்புக் அறிவித்தது.








இந்த பணியில் தமிழ், கன்னடம், ஒரியா, மராத்தி உள்ளிட்ட மொழிகள் பேசும் இளைஞர்கள் தேவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள ஐதராபாத்தில் உள்ள ஜென்பேக்ட் என்ற கருத்துகள் மேலாண்மை சேவை நிறுவனம் நேர்முகத் தேர்வை நடத்துவதாகக் கூறப்படுகிறது.







No comments:

Post a Comment

Please Comment