முதலமைச்சர் விளையாட்டு விருது விண்ணப்பிக்க அக். 10 கடைசி நாள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முதலமைச்சர் விளையாட்டு விருது விண்ணப்பிக்க அக். 10 கடைசி நாள்


முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க வரும் அக்.10 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரில் தலா 2 பேருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. 





இவ்விருதுடன் தலா ரூ. 1 லட்சம் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கம், பாராட்டு பத்திரங்கள் வழங்கப்படும்.மேலும் விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு தனிநபர், ஒரு நிர்வாகி, ஆதரவளிக்கும் ஒரு நிறுவனம், ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கம், பாராட்டு பத்திரத்துடன் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் வழங்கப்படுவோரின் முந்தைய 2 வருட செயல்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 



பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.ஒரு விருதிற்கு 3 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அதே வருடத்தில் அனுப்பக்கூடாது. விண்ணப்பிக்கும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு கழகம், மாவட்ட விளையாட்டு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், முதன்மை உடற்கல்வி அலுவலர் மூலமாகவும், விளையாட்டு போட்டிகளை நடத்தும் தனிநபர், நிர்வாகி, நடுவர், ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாளர் ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோர் விண்ணப்பங்களை உரிய வழிமுறையாகவும், உறுப்பினர் செயலருக்கு வந்து சேர வேண்டும்.விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மீது ' முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்' என எழுத வேண்டும்.






பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்.10 ஆகும்.

No comments:

Post a Comment

Please Comment